கைத்தொழில் வடிவமைப்புகள் என்றால் என்ன?

இது ஒரு கட்டுரையின் அலங்கார அல்லது அழகிய விடயமாகும். அதற்கு செயற்பாட்டுப் பண்புகள் எதுவும் இல்லை. ஓரு வடிவமைப்பு, ஒரு கட்டுரையின் வடிவம் (விளையாட்டுப்பொருள், போத்தல், ஆபரணம் அல்லது கதிரை போன்றவை) மூன்று பரிமாணங்களைக் கொண்டிருக்க முடியும். மேலும் மாதிரி அல்லது கோடுகள் போன்ற இரண்டு பரிமாணங்களைக் கொண்டிருக்கும். (வாழ்த்து அட்டைக்கான வடிவமைப்பு போன்றவை)

பாதுகாக்கப்பட்ட வடிவமைப்புகள்

ஒரு வடிவமைப்பு புதியதாக இருந்தால் அது பாதுகாக்கப்படுகிறது. அத்துடன், அது மோசமான வடிவமைப்பாக அல்லது ஒழுக்கக் கட்டுப்பாட்டுக்கு, பொதுமக்கள் ஒழுங்கு, பொதுமக்கள் ஆர்வத்திற்கு முரண்பட்டதாக இருத்தலாகாது. ஒரு வடிவமைப்பு பதிவுக்காக முன்வைக்கப்படுகின்ற திகதிக்கு முன்னர் உலகின் எந்த பாகத்திலும் பொதுமக்களுக்கு கிடைக்கக்கூடியதாக இருக்காவிட்டால் அது புதிய வடிவமைப்பாக கருதப்படுகிறது.

அவை எவ்வாறு பாதுகாக்கப்படுகின்றன?

அவை புலமைச் சொத்து அலுவலகத்தில் பதிவுசெய்யப்படுவதன் மூலம் பாதுகாக்கப்படுகின்ற. பதிவுசெய்யப்பட்ட வடிவமைப்பு ஐந்து வருடங்களுக்குப் பாதுகாக்கப்படுகிறது. அத்துடன் மேலும் ஐந்து வருடங்களுக்கு இரண்டு தடவை புதுப்பிக்க முடியும். தகுந்த கட்டணங்களுடன் புலமைச் சொத்து அலுவலகத்திற்கு D1 படிவத்தைப் பயன்படுத்தி தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பிக்க முடியும். (ஒழுங்குவிதிகளைப் பார்க்கவும்)

உரிமைகள்

ஒரு வடிவமைப்பின் உரிமையாளர், தயாரித்தல், பயன்படுத்துதல், இறக்குமதி செய்தல் மற்றும் அவற்றை உபயோகித்துள்ள பொருட்களை ஏற்றுமதி செய்தல் ஆகிய தனித்துவமான உரிமைகளைக் கொண்டிருக்கிறார்.

ஏன் அவை பாதுகாக்கப்படுகின்றன?

கைத்தொழில் வடிவமைப்பு பொருட்களை கவர்ச்சிகரமாக்குகிறது. அதனால் அதன் பெறுமதி அதிகரிக்கிறது. அத்துடன் அதை சந்தைப்படுத்தக்கூடியதாகவும் இருக்கிறது. இப்பாதுகாப்பு உருவாக்குனர் பயன்பெறுவதை உறுதிப்படுத்துகிறது. அத்துடன் முதலீட்டையும் மேம்படுத்துகிறது. அவை, கைத்தொழில், கைப்பணிப்பொருட்கள் பரவலாக விரிவடைவதை ஊக்குவிப்பதன் மூலம் பொருளாதார அபிவிருத்திக்குப் பங்களிப்புச் செய்கிறது. அத்துடன் அதிக தொழில் வாய்ப்புகளை உருவாக்குகிறது.

வெளிநாட்டில் பதிவுசெய்தல்

வடிவமைப்புகளைப் பதிவுசெய்தல் இலங்கையில் மாத்திரம் செல்லுபடியாகும். உரிமையாளர் அந்த வடிவமைப்பை வேறு நாடுகளுக்கு விரிவுபடுத்தினால் அந்த நாடுகளில் பதிவுசெய்துகொள்ளுவது நல்லது. பாதுகாப்பு தேவைப்படுகின்ற நாட்டில் அந்த நாட்டுச் சட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க வேண்டும். எவ்வாறாயினும் கைத்தொழில் சொத்துக்களைப் பாதுகாப்பதற்காக அதன் அங்கத்துவ நாடுகளில் பாரிஸ் உடன்படிக்கையின் கீழ் முன்னுரிமையளிக்கும்படி கோர முடியும். (இலங்கையில் புலமைச்சொத்து அலுவலகத்திற்கு விண்ணப்பித்த திகதியிலிருந்து 6 மாதங்களுக்குள்)

சமீபத்திய செய்திகள்